பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்


பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு: ஒருவர் பலி; 8 பேர் படுகாயம்
x

பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் பலியானர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் பெஷாவர் நகரில் உள்ள ஆஸ்பத்திரி வளாகம் அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தை குறிவைத்து மர்மநபர்கள் வெடிகுண்டு வீசினர்.

இதில் அந்த வாகனம் வெடித்து சிதறி ஒரு ராணுவ வீரர் கொல்லப்பட்டார். மேலும் துணை ராணுவத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story