பாகிஸ்தான்: வெளிநாட்டு வேலை தேடுவோர் எண்ணிக்கை 27.6 சதவீதம் ஆக உயர்வு


பாகிஸ்தான்:  வெளிநாட்டு வேலை தேடுவோர் எண்ணிக்கை 27.6 சதவீதம் ஆக உயர்வு
x

பாகிஸ்தானில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வெளிநாட்டு வேலை தேடுவோரின் எண்ணிக்கை 27.6 சதவீதம் ஆக உயர்ந்து உள்ளது.



லாகூர்,



பாகிஸ்தான் நாட்டில் வேலைவாய்ப்பு சந்தையில் ஏற்பட்டு உள்ள சரிவு, கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றால் அந்நாட்டு குடிமக்களில் பலர் வேலையில்லாமல், வருவாயுமின்றி திண்டாடி வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக அடுத்தடுத்து போடப்பட்ட ஊரடங்கால் திணறி போன பலர் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து போயினர். இதில், பஞ்சாப் மாகாணத்தில் 1,56,877 பேர் மற்றும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 76,213 பேர் உள்பட 2.86 லட்சத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் பலர் வெளிநாடுகளில் வேலை தேடி பதிவு செய்துள்ளனர்.

இவற்றில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் சவுதி அரேபியா (54 சதவீதம்), ஓமன் (13.4 சதவீதம்) மற்றும் கத்தார் (13.2 சதவீதம்) ஆகிய நாடுகளுக்கு செல்வதென்று முடிவு செய்துள்ளனர்.

இதனை பாகிஸ்தானின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு குடியேற்ற வாரியம் தெரிவித்து உள்ளது. இதன்படி, 2021ம் ஆண்டில் வெளிநாட்டு வேலையை தேடுவோரின் எண்ணிக்கை கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 27.6 சதவீதம் உயர்ந்து உள்ளது.


Next Story