பாக். பஞ்சாப் மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகாிப்பு - அவசர நிலை விதிக்க முடிவு


பாக். பஞ்சாப் மாகாணத்தில்  பாலியல் வன்கொடுமைகள்  அதிகாிப்பு - அவசர நிலை விதிக்க முடிவு
x

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பாலியல் வன்கொடுமைகள் தொடா்ந்து அதிகாித்து வருவதால் அங்கு அவசர நிலை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

லாகூா்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகாித்து வருகிறது. இதனால் அந்த மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் செய்ய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடா்பாக பஞ்சாப் உள்துறை அமைச்சா் கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரித்து வருவது சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான பிரச்சினையாக உள்ளது. எனவே, பாலியல் வழக்குகளை சமாளிக்க அவசரநிலையை பிரகடனப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு அரசு உட்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணத்தில் தினமும் நான்கைந்து பாலியல் சம்பவங்கள் பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பாலியல் துன்புறுத்தல், அத்துமீறல், வற்புறுத்தல் போன்ற வழக்குகளை கையாள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசு பாிசீலித்து வருகிறது.

பெண் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பற்றி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களைக் கண்காணிக்க பொதுமக்கள், பெண்கள் அமைப்புகள், ஆசிாியா்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோாிடம் ஆலோசனை நடத்தப்படும்.

மேலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதை பொருள்கள் பயன்படுத்துவது நாகரீகமாக மாறி வருகிறது. இது பாலியல் குற்றங்கள் அதிகாிக்க காரணமாக உள்ளது. எனவே பாலியல் பலாத்கார எதிர்ப்பு பிரச்சாரத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது என்றும், அங்கு பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும். என அவா் தொிவித்தாா்.


Next Story