பயங்கரவாத குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் நீட்டிப்பு


பயங்கரவாத குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு முன் ஜாமீன் நீட்டிப்பு
x

Image Courtesy: AFP

இம்ரான் கானுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான், போலீஸ் உயர் அதிகாரிகளியும் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கானுக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கில் அவருக்கு இஸ்லமாபாத் ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கி அதை ஏற்கனவே நீட்டித்து இருந்தது. இந்த நிலையில் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் அவருக்கு விதிக்கப்பட்ட முன் ஜாமீனை மேலும் 8 நாட்களுக்கு நீட்டித்து பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை முன் ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் முன் ஜாமீன் பெறுவது இது நான்காவது முறையாகும்.


Next Story