நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்
நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற பசுபதிநாத் கோவில் பாக்மதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவில் வளாகத்துக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பது ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீறி கோவிலுக்கு வரும் இளைஞர்கள் சிலர் ஆர்வமிகுதியில் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
எனவே இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் இனிமேல் ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அங்கு தற்போது ஆண்டுதோறும் நடைபெறும் பிரபல டீஜ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவில் நிர்வாகம் இதுபோன்று உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story