'பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை உறுதிப்படுத்தும்' - வெள்ளை மாளிகை


பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை உறுதிப்படுத்தும் - வெள்ளை மாளிகை
x

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாக ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

பிரதமர் நரேந்திர மோடி முதல் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் யோகா தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் பிரதமர் மோடி, அமெரிக்க காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை குறித்து வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு சபை செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், "இந்தியா மாபெரும் சக்தியாக உருவெடுப்பதை நாங்கள் ஆதரிக்கிறோம். இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் ஆழப்படுத்தவும் நாங்கள் விரும்புகிறோம். வெள்ளை மாளிகையில் இது ஒரு பெரிய வாரம். பிரதமர் மோடியின் வருகை இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை உறுதிப்படுத்துவதுடன் நமது மூலோபாய கூட்டாண்மையை உயர்த்தும்" என்று தெரிவித்தார்.


Next Story