கடுமையான சித்தாந்த நிலைப்பாடு தேவையில்லை - போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்


கடுமையான சித்தாந்த நிலைப்பாடு தேவையில்லை - போப் பிரான்சிஸ் அறிவுறுத்தல்
x

கோப்புப்படம்

போப் பிரான்சிஸ் நடத்திய இந்த நிகழ்வில் ரோமை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கர்தினால்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ரோம்,

போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி பகிர்ந்து கொண்டார். அப்போது கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், அவை இன்றைய யதார்த்தங்களை புரிந்து கொள்வதில் இருந்து தடுத்து விடும் என்றும் வாடிகன் நிர்வாகத்தினருக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 'நல்ல நோக்கங்கள் என்ற போர்வையில் அடிக்கடி நம்மை யதார்த்தத்திலிருந்து பிரித்து முன்னேற விடாமல் தடுக்கும் கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்போம்' என கேட்டுக்கொண்டார். போப் பிரான்சிஸ் நடத்திய இந்த நிகழ்வில் ரோமை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் கர்தினால்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தன்பாலின திருமணத்தை ஏற்றுக்கொண்டு அதை ஆசீர்வதிக்க போப் பிரான்சிஸ் சமீபத்தில் அனுமதி அளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய யதார்த்தத்தின்படி செயல்படுமாறு நிர்வாகத்தை அவர் கேட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story