பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.9 ஆக பதிவு


பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 6.9 ஆக பதிவு
x

பிஜி தீவில் ரிக்டரில் 6.9 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.நியூயார்க்,


பிஜி தீவின் மேற்கு வடமேற்கே 399 கி.மீ. தொலைவில் சுவா என்ற இடத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 587.2 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.

எனினும், இதனால் சுனாமி பாதிப்புக்கான ஆபத்து எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்து உள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.


Next Story