லண்டனில் வங்காளதேச பிரதமருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு


லண்டனில் வங்காளதேச பிரதமருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திப்பு
x

லண்டனில் வங்காளதேச பிரதமரை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சந்தித்தார்.

லண்டன்,

இங்கிலாந்து ராணி எலிசபெத் உடல் அடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி திரவுபதி முர்மு 3 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் ராணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்தநிலையில், நேற்று ராணி இறுதி ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பு, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை ஜனாதிபதி முர்மு சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ஷேக் ஹசீனாவின் சகோதரி ஷேக் ரெஹானாவும் உடன் இருந்தார்.

முன்னதாக, பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸ் அளித்த வரவேற்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார்.


Next Story