நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது அமெரிக்காவின் தனியார் விண்கலம்


நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது அமெரிக்காவின் தனியார் விண்கலம்
x
தினத்தந்தி 23 Feb 2024 7:44 AM IST (Updated: 23 Feb 2024 8:01 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்தின் விண்கலம் கடந்த 15 ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் பால்கான் 9 ராக்கெட் மூலம் நிலவுக்கு புறப்பட்டு சென்றது.

வாஷிங்டன்,

நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்காக விண்கலங்களும் நிலவுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. நிலவில் ஊர்ந்து செல்லும் ரோவர்களையும் அனுப்பி ஆய்வு நடைபெற்று வருகிறது. அமெரிக்கா நிலவுக்கு மனிதனையே அனுப்பி சோதனை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் இயங்கி வரும் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனம், நிலவுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பியுள்ளது. நாசா உதவியுடன் ஒடிஸியஸ் என்ற விண்கலத்தை தென் துருவம் அருகே தரையிறக்கியுள்ளது.

இந்த விண்கலத்தில் இருந்து சிக்னல்கள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் மேற்பரப்பை தொட்ட முதல் வணிக விண்கலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு பிறகு நிலவில் அமெரிக்காவை சேர்ந்த விண்கலம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கத்தில் இந்த விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

1 More update

Next Story