இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம்


இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம்
x
தினத்தந்தி 19 Sep 2022 4:01 PM GMT (Updated: 19 Sep 2022 4:02 PM GMT)

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ராணி 2-ம் எலிசபெத் கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

ஸ்காட்லாந்தில் இருந்து விமானம் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் கடந்த 13-ந்தேதி இங்கிலாந்து சென்றடைந்தது. லண்டனில் ராணி எலிசபெத்தின் உடலை இங்கிலாந்து மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் 2-ம் எலிசபெத்தின் உடல் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், லண்டனில் நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டா் அரங்கில் அஞ்சலிக்காக கடந்த புதன்கிழமை முதல் வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஐந்து நாள்களாக லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. செயிண்ட் ஜார்ஜ் கிறிஸ்தவ மத தேவாலயத்தில் ராணி அரச பாரம்பரிய முறைப்படி 2-ம் எலிசபெத்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட லட்சக்கண்ககானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story