ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா - இங்கிலாந்து அரசு அறிவிப்பு


ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா - இங்கிலாந்து அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 16 Nov 2022 9:39 AM GMT (Updated: 16 Nov 2022 10:36 AM GMT)

ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக, இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.

லண்டன்

இந்தியாவுடன் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் ஒன்று சேர்ந்துள்ள அமைப்பு 'ஜி-20' ஆகும்.

இந்த அமைப்பின் உச்சி மாநாடு, இந்தோனேசியாவில் பாலித்தீவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஜலன் நுசாதுவாவில் நவம்பர் 15, 16 ஆகிய இரு நாட்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மாநாட்டில் நேரில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அங்கு நேற்று முன்தினம் சென்றார்.

இந்த நிலையில், 'ஜி-20' நாடுகள் உச்சி மாநாடு நேற்று தொடங்கியது.

இந்தோனேசியாவில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியும், இந்திய வம்சாளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கும் சந்தித்த சில மணி நேரத்தில் இந்த அறிவிப்பை இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலமாக பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலானவர்கள் இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரையில் இங்கிலாந்தில் பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story