சிரியாவில் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்த மொசைக் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு


சிரியாவில் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்த மொசைக் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு
x

சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான மொசைக் கற்கள் கொண்ட கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டமாஸ்கஸ்,

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்த மொசைக் கற்கள் கொண்ட கட்டுமானத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான இந்த கட்டுமான அமைப்பு 20 மீட்டர் நீளமும், 6 மீட்டர் அகலமும் கொண்டுள்ளது.

இந்த மொசைக் கற்களில் மேற்கு அனடோலியாவில் நடந்த ட்ரோஜன் போரின் சித்தரிப்புகள் மற்றும் கிரேக்க புராண கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த மொசைக் கட்டடம் ஒரு கோட்டையாக இருந்திருக்கலாம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மொசைக் கட்டுமானத்தின் முழு அமைப்பு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அகழாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அகழாய்வு நடைபெற்று வரும் பகுதியை கடந்த 2018-ம் ஆண்டு சிரிய அரசு கைப்பற்றிய பிறகு, அங்கு அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story