ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு


ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு
x
தினத்தந்தி 16 Sept 2022 6:59 PM IST (Updated: 16 Sept 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

இன்றைய சகாப்தாம் போருக்கானது அல்ல என்றும் இது குறித்து தொலைபேசியில் உங்களிடம் பேசியிருப்பதாக புதினுடன் பேசுகையில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

சமர்கண்ட்,

உஸ்பெஸ்கிதானில் நடைபெற்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, மாநாட்டில் கலந்து கொண்டுள்ள உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி வருகிறார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

இந்த சந்திப்பின் போது பேசிய பிரதமர் மோடி, " இந்தியாவும் ரஷியாவும் பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இன்றைய சகாப்தம் போருக்கானது அல்ல. அமைதிப் பாதையில் எவ்வாறு நாம் முன்னேறலாம் என்பதைப் பற்றி பேச இன்று நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இந்தியா - ரஷியா இரு தரப்பு விஷயங்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து நாம் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். உணவு, எரிபொருள் பாதுகாப்பு மற்றும் உரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காணும் வழியை கண்டுபிடிக்க வேண்டும். உக்ரைனில் தவித்த மாணவர்களை மீட்பதற்காக உதவிய ரஷியா மற்றும் உக்ரைனுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன்" என்றார்.

பின்னர் பேசிய ரஷிய அதிபர் புதின், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

1 More update

Next Story