சாலை விபத்தில் இலங்கை மந்திரி சனத் நிஷாந்த பலி


சாலை விபத்தில் இலங்கை மந்திரி சனத் நிஷாந்த பலி
x
தினத்தந்தி 25 Jan 2024 8:54 AM IST (Updated: 25 Jan 2024 10:05 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் ஏற்பட்ட சாலை விபத்தில் அந்நாட்டு மந்திரி சனத் நிஷாந்த பலியானார்.

கொழும்பு,

இலங்கையில் ஏற்பட்ட சாலை விபத்தில் அந்நாட்டு மந்திரி சனத் நிஷாந்த பலியானார். காட்டுநாயாகாவில் இருந்து கொழும்பு நோக்கி தனது காரில் சனத் நிஷாந்த சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதியது. இந்தக் கோர விபத்தில் மந்திரி சனத் நிஷாந்த, பாதுகாவலர் மற்றும் கார் டிரைவர் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மூவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி மந்திரி சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாவலர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். கார் ஓட்டுநர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக இலங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story