மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம்!


மத்திய மந்திரி சர்பானந்த சோனாவால் ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அரசு முறை பயணம்!
x
தினத்தந்தி 18 Aug 2022 7:45 PM IST (Updated: 18 Aug 2022 7:49 PM IST)
t-max-icont-min-icon

இந்த சந்திப்பின் போது, மாலுமிகள் தகுதி சான்றளிப்பு தொடர்பாக, இந்தியா-ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

புதுடெல்லி,

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வழிகள் மற்றும் ஆயுஷ் ஆகிய துறைகளின் மந்திரியாக பொறுப்பு வகிக்கும் சர்பானந்த சோனாவால், அரசு முறைப் பயணமாக ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இன்று புறப்பட்டார்.

இந்த பயணத்தின் போது, ஈரானின் சபாகரில் உள்ள ஷாகித் பெகஸ்தி துறைமுகம், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஜபல் அலி துறைமுகம் ஆகியவற்றை பார்வையிட உள்ளார்.

இந்தியா சார்பில் வெளிநாட்டில் உருவாகும் முதல் துறைமுகமாக சபாகர் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐரோப்பா, ரஷியா மற்றும் காமன்வெல்த் நாடுகளுடனான இந்திய வர்த்தகத்தின் நுழைவு வாயிலாக சபாகர் துறைமுகம் விளங்கும் என்பதை இந்தப் பயணம் எடுத்துரைக்கும்.

இந்த சந்திப்பின் போது, மாலுமிகள் தகுதி சான்றளிப்பு தொடர்பாக, இந்தியா-ஈரான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.மேலும் ஈரான் நாட்டின் சாலை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, சுகாதாரம் மற்றும் மருத்துவக்கல்வித்துறை மந்திரிகளை சந்தித்து மந்திரி சர்பானந்த சோனாவால் பேசவுள்ளார்.

1 More update

Next Story