மாலியில் ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் சாவு: 14 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு


மாலியில் ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் சாவு: 14 ராணுவ வீரர்களும் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

மாலியில் ராணுவ தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் பலியாகினர். இந்த சம்பவத்தில் 14 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.

பமாக்கோ,

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் மத்திய பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் முகாமிட்டிருந்தனர். அங்கு அவர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது முகாமில் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து ராணுவ வீரர்களும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 30 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். 2 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த சம்பவங்களில் 14 ராணுவ வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story