வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கிய தென் கொரியா!


வட கொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடி கொடுக்க ராணுவ ஒத்திகை பயிற்சியை தொடங்கிய தென் கொரியா!
x

தென் கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.

சியோல்,

தென்கொரியாவில் அந்த நாட்டின் கடற்படை அமெரிக்க கடற்படையுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென் கொரியா வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சியை இன்று தொடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகிறது.

மேலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா கடந்த 2 வாரங்களாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வடகொரியா அடுத்தடுத்து குறுகிய தொலைவு 'பாலிஸ்டிக்' ரக ஏவுகணைகளை சோதித்தது.2 வாரங்களில் வடகொரியா நடத்திய 7க்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வட கொரியாவின் அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும் திறனை அதிகரிக்க இந்த தென் கொரியாவின் வருடாந்திர ராணுவ ஒத்திகை பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.


Next Story