சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இடம்


சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு இடம்
x

உலக அளவில் சுற்றுலாவுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை ‘வேர்ல்டுபேக்கர்ஸ்’ இணையதளம் வெளியிட்டு உள்ளது.

கொழும்பு,

கொரோனாவை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியும் இலங்கையை பாதித்து உள்ளதால், நாட்டின் சுற்றுலாத்துறை வெகுவாக ஸ்தம்பித்து உள்ளது. இதனால் சர்வேதச பயணிகளை ஈர்த்து அந்த துறைைய மீட்டெடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் உலக அளவில் சுற்றுலாவுக்கு ஏற்ற பாதுகாப்பான நாடுகள் பட்டியலை 'வேர்ல்டுபேக்கர்ஸ்' இணையதளம் வெளியிட்டு உள்ளது. இதில் பயணம் செய்வதற்கு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முன்னணி இடத்தை பிடித்து உள்ளது.

குறிப்பாக முதல் 12 இடங்களில் இலங்கையையும் அந்த இணையதளம் சேர்த்து உள்ளது. இலங்கையின் பெரும்பான்மையான கலாசாரம் பவுத்தமாக இருக்கும் நிலையில், அவர்களின் பழக்கவழக்கங்கள் அமைதியாகவும் வரவேற்கத்தக்கதாகவும் இருப்பதால், பயணம் செய்வதற்கு இது மிகவும் பாதுகாப்பான இடமாக அமைகிறது என்று அந்த இணையதளம் குறிப்பிட்டு உள்ளது.

இது இலங்கை சுற்றுலாத்துறைக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. அந்த இணையதளத்தின் வரிசைப்படுத்தலை சுட்டிக்காட்டி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சுற்றுலாத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story