இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் 50 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம் - பிரதமர் ரணில் எச்சரிக்கை

Image Courtacy: AFP
இலங்கையில் உணவு தட்டுப்பாட்டால் 50 லட்சம் பேர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு,
இலங்கையில் வரவுள்ள உணவு நெருக்கடியினால் 40 லட்சம் முதல் 50 லட்சம் வரையிலானவர்கள் நேரடியாக பாதிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்கே எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில் நாட்டின் உணவு பாதுகாப்பு திட்டங்களுக்கு அனைத்து எம்.பி.க்களும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். நிலைமையை கட்டுக்குள் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க உறுதிகொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நாட்டில் தரிசாக கிடக்கிற 1,500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களை விளை நிலைங்களாக மாற்றி உணவு தானிய உற்பத்தியை பெருக்கி எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிற இயக்கத்தில் ராணுவம் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவு பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கு ராணுவம், பசுமை விவசாய வழிகாட்டும் குழுவை ஏற்படுத்தி உள்ளது.






