பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலுக்கு போலீஸ்காரர் உயிரிழப்பு.. 6 பேர் படுகாயம்


பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதலுக்கு போலீஸ்காரர் உயிரிழப்பு.. 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Dec 2022 9:28 PM GMT (Updated: 24 Dec 2022 12:27 AM GMT)

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டார். மேலும், நான்கு போலீசார் மற்றும் இரண்டு பொதுமக்கள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

நாட்டின் பாராளுமன்றம் மற்றும் உயர் அலுவலகங்கள் அமைந்துள்ள அரசு கட்டிடங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் போலீஸ் தலைமையகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

குண்டுவெடிப்பு சம்பவத்தையடுத்து, சிறப்பு பயங்கரவாத எதிர்ப்புப் படை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தது. குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. குண்டுவெடிப்பு ஏற்பட்டபோது, வழக்கமான சோதனைக்காக போலீஸ் அதிகாரிகள் ஒரு டாக்ஸியை நிறுத்தியதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்தனர். அப்போது காரில் இருந்த நபர் ஒருவர் குண்டை வெடிக்கச்செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story