தைவானில் தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலி


தைவானில் தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கி 5 பேர் பலி
x

Image Courtesy: Reuters, AFP

தைவானில் தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி பலியாகினர்.

தைவான் நாட்டின் பிங்டங் மாகாணத்தில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அந்த தொழிற்சாலை முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் சிலர் மாயமாகி உள்ளதால் தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story