ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து


ஜப்பான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
x

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜப்பான் நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

டோக்கியோ,

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக ஜப்பானின் ஒசாகா மாகானத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனத்திற்கும், ஜப்பானின் டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கும் புதிய ஒப்பந்தம் முதல் அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

திருப்போரூருல் உள்ள டைசல் நிறுவனத்தில் ரூ.83 கோடி முதலீட்டில் ஏர்பேக் இன்புலேட்டர் தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 53 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒசாகா மாகானத்தில் உள்ள மேலும் இரண்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருக்கிறது.


Next Story