"போர்களை நிறுத்த பிரதமர் மோடி தலைமையில் குழு" - மெக்சிகோ அதிபர்


போர்களை நிறுத்த பிரதமர் மோடி தலைமையில் குழு - மெக்சிகோ அதிபர்
x

கோப்புப்படம் 

ஐநா மூலம் சீனா, ரஷியா மற்றும் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிப்பதை மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒபரடோர் சுட்டிகாட்டியுள்ளார்.

மெக்சிகோ,

நாடுகளுக்கு இடையே எழும் அதிகார போட்டி காரணமாக தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் போர் பதற்ற சூழல் நிலவி வருகிறது.

இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மெக்சிகோ நாட்டு அதிபர் லோபஸ் ஒபரடோர், ஐநா மூலம் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்காவை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிப்பதை சுட்டிகாட்டியுள்ளார்.

இதனால் உலகில் போர் நடைபெறுவதை தடுக்க, இந்திய பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் ஆகிய மூன்று பேர் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஐநாவிடம் தாம் பரிந்துரைக்க இருப்பதாக தெரிவித்துள்ள லோபஸ், பிரதமர் மோடி உட்பட மூவரின் தலையீட்டை சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் ஏற்று கொள்ள வேண்டும் என்றும் கேட்டு கொண்டிருக்கிறார்.


Next Story