2 நிமிட கூகுள் மீட் அழைப்பு.. 200 ஊழியர்கள் பணிநீக்கம்: அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் அதிரடி


2 நிமிட கூகுள் மீட் அழைப்பு.. 200 ஊழியர்கள் பணிநீக்கம்: அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் அதிரடி
x

ஆட்குறைப்பு நடவடிக்கையால் முழுநேர ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் வேலையை இழந்துள்ளனர்.

வாஷிங்டன்:

நிதி நெருக்கடி, அதிகரிக்கும் செலவினம், வருவாய் குறைவு போன்ற காரணங்களால், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை குறைத்துவருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஸ்டார்ட்அப் தொழில்நுட்ப நிறுவனமான பிரன்ட்டெஸ்க் நிறுவனமும் இணைந்துள்ளது.

ஆன்லைன் வாடகை தளமான பிரன்ட்டெஸ்க் நிறுவனம், சமீபத்தில் முதற்கட்டமாக 200 பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறது. இந்த நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கையால் முழுநேர ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் வேலையை இழந்துள்ளனர். 2 நிமிட கூகுள் மீட் அழைப்பு மூலம் இந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாக, டெக்கிரஞ்ச் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

பிரன்ட்டெஸ்க் தலைமை செயல் அதிகாரி ஜெஸ்சி டிபின்டோ, ஊழியர்களிடம் பேசுகையில், நிறுவனத்தின் மோசமான நிதிநிலை மற்றும் மூலதனத்தை பெற முடியாத நிலை பற்றி தெரிவித்தார். திவால் நிலையை தவிர்க்க ரிசீவர்ஷிப்பிற்காக விண்ணப்பிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

பிரன்ட்டெஸ்க் 2017 இல் தொடங்கப்பட்டது. அமெரிக்கா முழுவதும் 1,000 க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்வகித்துள்ளது. விஸ்கான்சினில் உள்ள சென்சிட்டி நிறுவனத்தை வாங்கிய 7 மாதங்களுக்குப் பிறகு இந்த கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்கிறது. சொத்து வாடகையை கொடுக்க முடியாமல் திணறியதால் நிறுவனம் நிதி சவால்களை எதிர்கொண்டது. அத்துடன் தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக நில உரிமையாளர்களுடனான உறவுகள் மற்றும் நம்பகத்தன்மை குறைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story