பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு: ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவு


பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு: ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவு
x

அமெரிக்க கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்துள்ளார்.

வாஷிங்டன்,

மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்பு இருப்பதாக இந்தியா முன்வைத்த கோரிக்கையின் பேரில் பாகிஸ்தான்-அமெரிக்கரான தஹாவூர் ராணா அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து மும்பை தாக்குதல் வழக்கில் விசாரணைக்காக, தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டுமென அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை வைத்தது.

கைதிகளை பரிமாறிக்கொள்ளும் இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் கீழ் தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கோர்ட்டில் தஹாவூர் ராணா தரப்பில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தஹாவூர் ராணா மேல்முறையீடு செய்துள்ளார். மேலும் இந்த மனு விசாரணைக்கு வரும் வரை தன்னை இந்தியாவுக்கு நாடு கடத்த தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.


Next Story