போலாந்தில் கடும் புயல்: ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு


போலாந்தில் கடும் புயல்: ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிப்பு
x

போலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வார்சா,

போலாந்து நாட்டில் நேற்று கடும் புயல் வீசியது. அந்நாட்டின் தெற்கு - கிழக்கு மாகாணங்களில் கடும் புயலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக அந்நாட்டின் மசோவா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது. மின் இணைப்பு துண்டிப்பால் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த புயல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயலால் வீடுகள், சாலைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story