பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதல்; 5 பேர் பலி


பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதல்; 5 பேர் பலி
x

பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதியதில் ஒரு பெண் உள்பட 5 பேர் பலியாகி உள்ளனர்.

ராவல்பிண்டி,

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் மீது கண்டெய்னர் லாரி ஒன்று பின்னால் வந்து மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 4 பேர் ஆண்கள். ஒருவர் பெண் ஆவார். இதுதவிர, 4 பெண்கள், 2 ஆண்கள் காயமடைந்தனர்.

இதேபோன்று, மன்ஷேரா நகரில் பத்தகிராமில் இருந்து ஹஜாரா பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் வேன் ஒன்று கடந்த ஞாயிற்று கிழமை, பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. இதில், 2 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.


Next Story