அமெரிக்கா: விமான சாகசத்தின் போது விபத்து - இரண்டு விமானிகள் பலி


அமெரிக்கா: விமான சாகசத்தின் போது விபத்து - இரண்டு விமானிகள் பலி
x

அமெரிக்காவில் விமான சாகசத்தின் போது இரண்டு விமானங்கள் மோதிய விபத்தில் சிக்கி இரண்டு விமானிகள் உயிரிழந்தனர்

நெவாடா மாகாணம்,

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் ரெனோ விமான கண்காட்சி நடந்தது. இதில் ஏராளமான விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. அப்போது டி-6 கோல்டு என்ற விமானம் மற்றொரு விமானம் மீது மோதியது. இந்த விபத்தில் விமானம் கீழே விழுந்து இரு விமானிகளும் பலியாகினர்.

இந்த சம்பவம் குறித்து ரெனோ ஏர் ரேசிங் அசோசியேஷன் அதிகாரிகள் கூறுகையில், "மதியம் 2:15 மணியளவில் T-6 தங்கப் போட்டியின் முடிவில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டன" என்று தெரிவித்தார். மற்ற விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. மேலும் இறந்த விமானிகளின் பெயர்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.


Next Story