அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 பேர் உயிரிழப்பு
x

அமெரிக்காவில் நடுவானில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் கொலராடோ மாகாணம் லாங்மாண்ட் நகருக்கு அருகே செஸ்னா 172 ரக சிறிய விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. விமானத்தில் விமானி உள்பட 2 பேர் இருந்தனர்.

அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்துடன் இந்த விமானம் நேருக்கு நேர் மோதியது. அதை தொடர்ந்து 2 விமானங்களும் தரையில் விழுந்து நொறுங்கின.

இந்த கோர விபத்தில் செஸ்னா 172 ரக விமானத்தில் பயணம் செய்த 2 பேர் மற்றும் விபத்துக்குள்ளான மற்றொரு விமானத்தில் இருந்த ஒரே ஒரு விமானி என 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் என்ன என்பதை அறிய அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.


Next Story