இங்கிலாந்தில் அகதிகள் முகாமில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகள் நடத்திய சதி: விசாரணையில் தகவல்


இங்கிலாந்தில் அகதிகள் முகாமில் வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பயங்கரவாதிகள் நடத்திய சதி: விசாரணையில் தகவல்
x

டோவெர் பகுதியில் உள்ள அகதிகளுக்கான முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சமீபத்தில் வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரை சமாளிப்பதில் அந்நாட்டு அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. வடக்கு ஐரோப்பாவிலிருந்து சிறிய படகுகளில் கால்வாயை கடந்து ஏராளமான புலம்பெயர்ந்தோர் இங்கிலாந்துக்குள் நுழைகின்றனர்.

டோவெர் பகுதியில் உள்ள ஒரு புலம்பெயர்ந்தோர் அகதிகளுக்கான முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் நிலவியது.

ஆண்ட்ரூ லீக் என்ற நபர் டந்த ஞாயிற்றுக்கிழமை இந்த புலம்பெயர்ந்தோர் முகாமில் வெடிகுண்டுகள் வீசிவிட்டு தானும் உயிரை மாய்த்துக்கொண்டார். அதில் இரு அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டது.அங்கு இங்கிலாந்து உள்துறை செயலாளர் சுவெல்லா பிராவர்மேன் இந்த வாரம் சென்று ஆய்வு செய்தார்.

இச்சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது. அதில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் இது என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதனிடையே, லண்டனில் உள்ள ஒரு புலம்பெயர்ந்தோர் முகாமில் நேற்று மின்தடை ஏற்பட்டபோது, அங்கு உள்ளவர்கள் ஆயுதங்களுடன் அமைதிக்கு இடையூறு தூண்டும் வகையில் நடந்துகொண்டனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story