உக்ரைனில் ஜபோரிஜ்ஜியா அணு உலை மூடப்பட்டது என அறிவிப்பு


உக்ரைனில் ஜபோரிஜ்ஜியா அணு உலை மூடப்பட்டது என அறிவிப்பு
x

உக்ரைனில் ஜபோரிஜ்ஜியா உலையின் மின் கட்டமைப்பு மீண்டும் இணைந்து செயல்பட தொடங்கிய சூழலில், தனித்து இயங்கிய ஒரேயொரு அணு உலை மூடப்பட்டு உள்ளது.



கீவ்,



உக்ரைன் நாட்டின் ஜபோரிஜ்ஜியா உலையில், கடந்த வாரம் அந்த பகுதியில் ஏற்பட்ட போர் மற்றும் தாக்குதல் விளைவாக அனைத்து மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டு விட்டன. 6 உலைகள் கொண்ட அதன் செயல்பாடு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு பாதிக்கப்பட்டது.

இதனால், நகரின் பிற இடங்களுக்கு மின் வினியோகிப்பதில் இடையூறு ஏற்பட்டது. இதனால், பல நாட்களாக மீதமுள்ள ஒரே ஒரு அணு உலை உதவியுடனேயே மின் உற்பத்தி நடைபெற்று வந்தது.

ஐரோப்பாவின் மிக பெரிய அணு உலை என அழைக்கப்படும் அதன் உதவியாலேயே மின் உற்பத்தி செய்யப்பட்டு பிற இடங்களுக்கு பகிரப்பட்டு வந்தது. இதுபோன்ற சூழலில், அதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஆபத்து கூட நேரிடும் சூழல் ஏற்படும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட சர்க்கியூட்டில் (மின்சுற்று) மின்சாரம் பாய்கிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாத நிலை இருக்கும்.

இந்நிலையில், மின் கட்டமைப்புடன் அந்த உலை மீண்டும் இன்று இணைக்கப்பட்டது. இதனால், ஐரோப்பாவின் மிக பெரிய அணு உலையானது மூடப்பட்டு உள்ளது.

எனினும், உக்ரைனின் அணு உலை நிறுவனம் கூறும்போது, வெளியில் இருந்து வரும் மின்சாரம் மீண்டும் துண்டிக்கப்பட்டு உள்ளது. அதனால், ஆபத்து தொடருகிறது. இதனால், உலையில் அவசரகால டீசல் ஜெனரேட்டர்களை பயன்படுத்த கூடும். அதன் வழியே உலைகளை குளிர செய்து, அணு சக்தி உருகாமால் பார்த்து கொள்ள முடியும் என கூறியுள்ளது.

எனினும், 10 நாட்களுக்கு மட்டுமே வர கூடிய டீசல் எரிபொருள் மீதமுள்ளது என்றும் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.

போர் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து ரஷிய படைகளால் அந்த உலையானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. உலகின் மிக பெரிய 10 அணு உலைகளில் ஒன்றாக அது உள்ளது. உலையை சுற்றி தாக்குதல் நடத்தியதில் அது சேதப்படுத்தப்பட்டு விட்டது என உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குறை கூறி வருகின்றனர்.


Next Story