ரஷிய படைகள் வெளியேற்றம்: முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் ஜெலென்ஸ்கி


ரஷிய படைகள் வெளியேற்றம்: முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்! மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அதிபர் ஜெலென்ஸ்கி
x

ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

கீவ்,

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷியா படைகள் கைப்பற்றின. இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ரஷிய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

உக்ரைனின் கிழக்கில் உள்ள டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷியா பயன்படுத்தி வந்தது. ரஷியாவுடன் இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களில் டொனெட்ஸ்க்கும் ஒன்றாகும்.

அந்த நகரை மீட்க உக்ரைன் படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். அந்த நகரை உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷிய படைகள் பின் வாங்கின. அங்குள்ள லைமனை உக்ரைன் படைமீட்டுள்ளது ரஷியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேற்று கூறுகையில், "மதியம் 12:30 நிலவரப்படி, லைமன் பகுதி ரஷிய துருப்புக்களிடமிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டது. எங்கள் ராணுவத்திற்கு மிக்க நன்றி!" என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


Next Story