ரஷிய தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக உக்ரைன் தானிய ஏற்றுமதி; நேரில் பார்வையிட்டார் ஜெலன்ஸ்கி


ரஷிய தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக உக்ரைன் தானிய ஏற்றுமதி; நேரில் பார்வையிட்டார் ஜெலன்ஸ்கி
x
தினத்தந்தி 29 July 2022 1:44 PM GMT (Updated: 2022-07-29T19:15:30+05:30)

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒடேசா துறைமுகத்திற்கு சென்று தானிய ஏற்றுமதியை பார்வையிட்டார்.

ஒடேசா,

ரஷிய படையெடுப்பிற்கு பிறகு முதல் முறையாக தானிய ஏற்றுமதியை உக்ரைன் தொடங்கி உள்ளது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒடேசா துறைமுகத்திற்கு சென்று தானிய ஏற்றுமதியை பார்வையிட்டார்.

ஒடேசா துறைமுகத்தில் துருக்கி நாட்டு கப்பலில் தானியங்கள் ஏற்றப்படுவதை ஜெலன்ஸ்கி பார்வையிட்டார்.

இது குறித்து ஜெலன்ஸ்கி கூறுகையில், போர் தொடங்கியதற்கு பிறகு முதல் முறையாக கப்பலில் தானியம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தானியங்கள் ஏற்றப்பட்ட பல கப்பல்கள் புறப்பட முடியாமல் துறைமுகங்களில் உள்ளன. அவை புறப்பட்ட உடன் தானிய ஏற்றுமதி தொடங்கும். என அவர் தெரிவித்தார்.


Next Story