ஆசியாவில் நேட்டோ; ஜப்பான் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் - வடகொரியா குற்றச்சாட்டு


ஆசியாவில் நேட்டோ; ஜப்பான் தென்கொரியாவுடன் அமெரிக்கா ஒப்பந்தம் - வடகொரியா குற்றச்சாட்டு
x

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.

சியோல்,

ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் சமீபத்திய ஒப்பந்தத்தை வடகொரியா விமர்சித்துள்ளது.

வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:- "ஆசிய பிராந்தியத்தில், 'நேட்டோ' போன்றதொரு ராணுவக் கூட்டணியை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

'வட கொரியாவிடமிருந்து அச்சுறுத்தல்' என்ற வதந்தியை அமெரிக்கா தொடர்ந்து பரப்புகிறது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ராணுவ ஆதிக்கத்தை அடைவதற்கான ஒரு சாக்குப்போக்கு காரணமாக, அமெரிக்கா வட கொரியாவை குற்றம் சாட்டுகிறது.

தற்போதைய சூழ்நிலையில், பாதுகாப்பு மோசமடைவதைத் தீவிரமாகச் சமாளிக்க, எங்கள் நாட்டின் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கு அவசரமாக செயல்படுகிறோம்" என்று வடகொரிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

கடந்த வாரம் நேட்டோ உச்சிமாநாட்டின் போது, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் தலைவர்கள் சந்தித்து, வட கொரியாவிற்கு எதிராக தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கான கூடுதல் வழிமுறைகளை ஆராய ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story