சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ள அமெரிக்க அதிபர்- வெள்ளை மாளிகை தகவல்


சீன அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ள அமெரிக்க அதிபர்- வெள்ளை மாளிகை தகவல்
x

கோப்புப்படம் 

ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் 3வது முறையாக சீன அதிபரான பின்பு, ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார்.

அப்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


Next Story