ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது - அமெரிக்கா


ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது - அமெரிக்கா
x

ரஷிய கச்சா எண்ணெயிலிருந்து எரிபொருள் தயாரித்து அமெரிக்க நகரங்களுக்கு கடல் வழியாக இந்தியா கொண்டு செல்வதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறப்பட்டதை மறைத்து அமெரிக்காவுக்கு நகரங்களுக்கு இந்திய கப்பல்கள் கொண்டு செல்வது கவலையளிக்கிறது என இந்தியாவுக்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. இந்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா தெரிவித்தார்.

ரஷியாவில் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து எரிபொருள் தயாரித்து அவற்றை நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களுக்கு கடல் வழியாக இந்தியா கொண்டு செல்வதாகவும், ரஷியா மீதான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை மீறி இந்தியா செயல்படுவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.

இந்திய கப்பல் ஒன்று ரஷியாவின் எண்ணெய் கப்பலில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கடல் வழியாக குஜராத்தில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் இந்த தகவலை அமெரிக்க கருவூலத்துறை புகார் தெரிவித்துள்ளது என இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் மைக்கேல் பத்ரா கூறினார்.

அதன்படி, குஜராத்தில் உள்ள அந்த துறைமுகத்தில் வைத்து எண்ணெயை சுத்திகரித்து மீண்டும் நியூயார்க் உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்திய நிறுவனங்கள் அனுப்புவதாக சுதந்திர தின நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பத்ரா கூறினார்.

ரஷியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளின் படி, ரஷியாவில் இருந்து எண்ணெய், எண்ணெய் சார்ந்த பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷியாவில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் சுத்திகரித்து அதை இயக்கிக் கொண்டு செல்லும் இந்திய கப்பல் நியூயார்க் போன்ற நகரங்களுக்கு செல்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இந்த விஷயம் குறித்து கூறிய மைக்கேல் பத்ரா, ரஷியாவில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்பட்டு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களாக மாற்றம் செய்யப்படுகிறது என்ற தகவல் தனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

உலகிலேயே கச்சா எண்ணெய் அதிக அளவு இறக்குமதியை செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் ரஷியாவில் இருந்து பெறப்படும் எண்ணெயின் அளவு குறைவு. இந்த நிலையில் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷியாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு பல மேற்கத்திய நாடுகள் தடை விதித்ததால், குறைந்த விலைக்கு ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்து வாங்கி வருகிறது என்று கூறப்படுகிறது.


Next Story