இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை


இந்தோனேசியாவில் எரிமலை வெடித்து சிதறல்: சுனாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 April 2024 1:33 PM IST (Updated: 18 April 2024 2:36 PM IST)
t-max-icont-min-icon

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது.

ஜகார்த்தா,

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஜாவா தீவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருக்கும் 800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். எரிமலையை சுற்றி 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், எரிமலை வெடிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர்.


1 More update

Next Story