தெற்கு ஜப்பானில் எரிமலை வெடிப்பு... மக்கள் வெளியேற அறிவுறுத்தல்


தெற்கு ஜப்பானில் எரிமலை வெடிப்பு... மக்கள் வெளியேற அறிவுறுத்தல்
x

கோப்புப்படம் 

தெற்கு ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியது.

டோக்கியோ,

தெற்கு ஜப்பானின் ககோஷிமாவில் உள்ள சகுராஜிமா எரிமலை திடீரென வெடிக்க தொடங்கியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று இரவு 8 மணியளவில் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

எரிமலையில் இருந்து சிவப்பு-சூடான பாறைகள் மற்றும் சாம்பல்கள் வெடிப்பதை உள்ளூர் ஊடகங்கள் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறுவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எரிமலையில் இருந்து வெளியேறிய புகையானது வான்பரப்பில் 300 மீட்டர் வரை விரிந்துள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.


Next Story