21 வயது இளம்பெண் எம்.பி.,யின் கம்பீர உரை: அதிர்ந்த நாடாளுமன்றம் - வைரலாகும் வீடியோ!


21 வயது இளம்பெண் எம்.பி.,யின் கம்பீர உரை: அதிர்ந்த நாடாளுமன்றம் -  வைரலாகும் வீடியோ!
x
தினத்தந்தி 5 Jan 2024 8:29 PM GMT (Updated: 5 Jan 2024 8:42 PM GMT)

ஹனா-ரவ்ஹிதி மைபி நியூசிலாந்தின் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.

வெலிங்டன்,

நியூசிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. 54வது நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தலில் தேசிய கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது. பிரதமராக கிறிஸ்டோபர் லக்ஸோன் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் டி பாடி மவோரி கட்சியை சேர்ந்த 6 பேர் எம்.பிக்களாக வெற்றி பெற்றனர். அதில் ஹானா ரவ்ஹிடி மைபி கிளார்க் என்ற இளம்பெண்ணும் அடங்குவார். இவருக்கு வயது 21.

நியூசிலாந்து நாட்டில் கடந்த 170 ஆண்டுகளில் மிக இளவயதில் தேர்வு செய்யப்பட்ட முதல் எம்.பி என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஹவுரகி வைகாடோ தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று வந்த தொழிலாளர் கட்சியை சேர்ந்த நானய்யா மஹவுதாவை 2,911 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். இதன்மூலம் இளவயது எம்.பி, செல்வாக்கு பெற்ற தலைவரை வீழ்த்தியது என இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.

கடந்த மாதம் அவர் நாடாலுமன்றத்தில் ஆற்றிய உரைதான் இப்பொது வைரலாகி வருகின்றது. அவர் ஆற்றிய உரையின்போது,

தங்கள் பாரம்பரிய 'ஹக்கா' அதாவது 'போர் முழக்கம்' செய்து தனது வாக்காளர்களுக்கு தன் வாக்குறுதிகளை அளித்தார். நான் உங்களுக்காக சாகவும் தயார்... ஆனால் உங்களுக்காக நான் வாழ்வேன்" என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு முன், தனிப்பட்ட முறையில் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று எனக்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டன.

வீட்டில் இருந்து இதை பார்க்கும் ஒவ்வொரு நபருக்கும்... இது என்னுடைய தருணம் அல்ல, இது உங்களுடையது" என்று தான் கூற விரும்புவதாக தனது உரையின் முடிவில் கூறினார். பேசுவதற்கு முன் நியூசிலாந்தில் உள்ள மவோரி மக்களின் நடனமான மவோரி ஹக்காவை அவர் நிகழ்த்தினார்.

நியூசிலாந்து நாட்டின் பழங்குடியின குழுக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறார். இவரது தாத்தாவான தைதிமு மைபி போராளியாக இருந்தவர். மாவோரி இனத்திற்காக போராடி வந்த இன்கா டமாடோவா என்ற குழுவின் உறுப்பினராக இருந்தவர். தாத்தா டமாடோவாவின் செயல்பாடுகளில் ஈர்க்கப்பட்டு அரசியல் பாதையை தேர்வு செய்திருக்கிறார்.

மைபி-கிளார்க்கை இன்ஸ்டாகிராமில் 20,000 பின்தொடர்பவர்களும், டிக்டாக்கில் 18,500 பின்தொடர்பவர்களும் இருக்கிறார்கள். மைபி-கிளார்க் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக ஆக இருக்கிறார். மண்ணும் மலையும் எங்கள் பரம்பரைக்கே சொந்தமடா என்ற பாணியில் நியூசிலாந்தின் 21 வயது எம்பியான மைபி-கிளார்க் குரல் இப்போது சமூக ஊடகங்களில் ஓங்கி ஒலிக்கிறது.


Next Story