சீனாவில் ஊரடங்கு, போராட்டம்: சர்வதேச சந்தைகளில் பங்குகள் கடும் வீழ்ச்சி


சீனாவில் ஊரடங்கு, போராட்டம்: சர்வதேச சந்தைகளில் பங்குகள் கடும் வீழ்ச்சி
x

Image Credit: AP

சீனாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன.

பாங்காங்,

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக சீனாவில் கடுமையான போராட்டம் வெடித்துள்ளது. அதிபர் ஜி ஜின்பிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மாணவர்கள், இளைஞர்கள் பல தரப்பினரும் பொது வெளியில் போராட தொடங்கியிருக்கின்றனர். கடுமையான கட்டுப்பாடுகள் கொண்ட சீனாவில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறுவது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சீனாவில் கொரோன பரவல் மற்றும் அதை சார்ந்து வெடித்துள்ள போராட்டங்களால் சர்வதேச சந்தைகளில் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.ஐரோப்பிய, ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிப்பது உற்பத்தி, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இடர்பாடுகளை ஏற்படுத்தும் என்பதால், விநியோகச்சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று முதலீட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.


Next Story