உக்ரைன் மற்றும் தைவான் விவகாரங்கள் குறித்து விவாதிக்க ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!


உக்ரைன் மற்றும் தைவான் விவகாரங்கள் குறித்து விவாதிக்க ரஷிய அதிபர் புதினுடன் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு!
x

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் நேரில் சந்திக்க உள்ளனர்.

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் உஸ்பெகிஸ்தானில் வியாழன் அன்று நடைபெறும் கூட்டத்தில் நேரில் சந்தித்து, உக்ரைன் மற்றும் தைவான் விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுக்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடு செல்லாமல் இருந்த ஜி ஜின்பிங் முதல் முறையாக இந்த வாரம் மத்திய ஆசியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

புவிசார் அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபர் மாளிகையின் முக்கிய அதிகாரி கூறுகையில், "உக்ரைன் மீது ரஷியா தனது சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்குத் தூண்டியதற்கான காரணங்களை சீனா தெளிவாக புரிந்து கொண்டுள்ளது. இந்த விவகாரம், வரும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்,'' என்றார்.

உஸ்பெகிஸ்தானின் புராதன நகரமான சமர்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டை ஒட்டி இருநாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் நாடான சீனாவிற்கும் இயற்கை வளங்கள் நிறைந்த ரஷியாவின் இடையிலான இத்தகைய ஆழமான வரம்புகள் இல்லாத கூட்டாண்மையை, புவிசார் அரசியல் வளர்ச்சியை மேற்கத்திய நாடுகள் கவலையுடன் கவனித்து வருகின்றன.


Next Story