சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவின் வாஷிங்டன் நினைவகத்தில் ஆர்வத்துடன் யோகா பயிற்சி செய்த பொதுமக்கள்!


சர்வதேச யோகா தினம்: அமெரிக்காவின் வாஷிங்டன் நினைவகத்தில் ஆர்வத்துடன் யோகா பயிற்சி செய்த பொதுமக்கள்!
x

அமெரிக்காவின் வாஷிங்டன் நினைவகத்தில், யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் செய்தது.

வாஷிங்டன்,

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஐ.நா சபையால் உலகம் முழுவதும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த வருடம் 75வது சுதந்திர ஆண்டு விழா கொண்டாட்டம், ஓராண்டுக்கு கொண்டாடப்பட்டு வருவதால் அதனையொட்டி யோகா தினத்தை சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள முக்கியமான எழுபத்தைந்து இடங்களில் யோகா தினத்தின் போது பல தரப்பு மக்களும் கூட்டாக பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், யோகா தினத்தன்று பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் இணைய வழியில் தொடர் யோகா பயிற்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி 70 நாடுகளில் உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு தொடங்கி கூட்டு யோகா பயிற்சி நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் மத்திய மந்திரிகள், திரைப் பிரபலங்கள், யோகாசன நிபுணர்கள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதன் மூலமாக இந்தியாவின் புகழை சர்வதேச அளவில் மேலும் உயர்த்த முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதனை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள வாஷிங்டன் நினைவகத்தில், யோகா பயிற்சிக்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் செய்தது. இந்த யோகா பயிற்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு யோகாசனங்களையும் செய்தனர்.

இது குறித்து, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து கூறியதாவது:-

சர்வதேச யோகா தினத்தைக் குறிக்கும் வகையில், ஹூஸ்டன், நியூயார்க் மற்றும் பிற அமெரிக்க நகரங்களில் உள்ள மற்ற சின்னச் சின்ன இடங்களில் இதே போன்ற நிகழ்வுகளை நாங்கள் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றார்.


Next Story