#லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ராணுவ உதவிக்கு நன்றி - உக்ரைன் அதிபர்


#லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ராணுவ உதவிக்கு  நன்றி - உக்ரைன் அதிபர்
x
தினத்தந்தி 9 July 2022 12:28 AM GMT (Updated: 9 July 2022 1:36 PM GMT)

உக்ரைன் - ரஷியா இடையேயான போர் 136-வது நாளாக நீடித்து வருகிறது.


Live Updates

  • 9 July 2022 12:04 PM GMT

    உக்ரைனில் புதிதாக சேர்க்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு இங்கிலாந்து பயற்சி அளிக்க தொடங்கியுள்ளது. இங்கிலாந்து தலைமையில் நடைபெறும் இந்த பயிற்சி திட்டத்தில் 1,050- இங்கிலாந்து ராணுவ வீரர்கள், உக்ரைனை சேர்ந்த வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இந்த பயிற்சியில் வீரர்களுக்கான அடிப்படை பயிற்சியான ஆயுதங்களை கையாளுதல், போர்க்களத்தில் முதல் உதவி அளிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 9 July 2022 6:22 AM GMT

    ரஷியா மீதான பொருளாதர தடைகள் எரிபொருள் விலையை அதிகரித்து பேரழிவை உருவாக்க வழிவகுக்கும் என அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

  • 9 July 2022 12:36 AM GMT

    கெர்சன் பகுதியை விட்டு உடனே வெளியேற வேண்டும் - மக்களுக்கு உக்ரைன் துணை பிரதமர் வேண்டுகோள்

    உக்ரைனின் துணைப் பிரதம மந்திரி இரினா வெரேஷ்சுக், தெற்கு கெர்சன் பகுதியை காலி செய்யுமாறு அங்குள்ள மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    உக்ரைன் மக்கள் ரஷிய படைகளால் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படலாம் என்றும், ஜபோரிஜியா மற்றும் கெர்சன் பிராந்தியங்களின் ஆக்கிரமிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்குவது ஆபத்தானது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    "மக்கள் வெளியேறுவதற்கான வாய்ப்பைத் தேட வேண்டும், ஏனென்றால் நமது ஆயுதப் படைகள் அங்கு வெளியேற்றபடுவார்கள் அங்கு சண்டை நடைபெற வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்தார். 

  • 9 July 2022 12:31 AM GMT

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வரும் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷியாவுக்கு எதிராக நிற்கின்றன. அந்த நாடுகள் உக்ரைனுக்கு உதவிகளை வழங்குவதோடு, ரஷியா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

    இந்த நிலையில் ‘முடிந்தால் போரில் எங்களை வெல்ல முயற்சி செய்யுங்கள்' என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் சவால் விடுத்துள்ளார். மேலும், தங்களது நிபந்தனைகளை உக்ரைன் உடனடியாக ஏற்காவிட்டால் மிக மோசமான நடவடிக்கைகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்று அவா் எச்சரித்தாா்.

    இந்தநிலையில், அமெரிக்காவின் ஆதரவு மற்றும் இராணுவ உதவிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். "எதிரியை அழுத்துவதற்கு இது எங்களுக்கு உதவும் என்றார்.


Next Story