ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தர வேண்டும் - ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தர வேண்டும் - ஜெலென்ஸ்கி வலியுறுத்தல்
x

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்துள்ள உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தர வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

கீவ்,

ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர விண்ணப்பித்துள்ள உக்ரைனுக்கு டென்மார்க் ஆதரவு தர வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உக்ரைனைப் பரிந்துரைக்க தயங்கும் நாடுகளில் டென்மார்க்கும் ஒன்று.இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு ஒரு வேட்பாளர் அந்தஸ்து வழங்குவது குறித்து டென்மார்க்கில் நிச்சயமற்ற நிலை உள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் வேட்பாளர் நிலையை ஆதரிக்குமாறு டென்மார்க்கை ஜெலென்ஸ்கி வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, "ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர உக்ரைனின் வேட்பாளர் நிலையை, மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து வலுவாகவும் ஐக்கியமாகவும் டென்மார்க் இருக்க வேண்டும் என்று நான் மிகவும் விரும்புகிறேன்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் உரிமைக்கான பாதை, இன்னும் நீண்ட கால எடுத்துக்கொள்ளும். உக்ரேனியர்களை ஒன்றிணைப்பதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இது அமையும். உக்ரைனுக்கு டென்மார்க்கின் ராணுவ உதவி அவசியமானது. இது எங்களது நாட்டிற்கான ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வரைவு தோற்றம்" என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வேட்பாளர் நாடாக உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்க, விரைவில் ஐரோப்பிய ஆணையம் பரிந்துரைக்கும் எனத் தெரிகிறது.

Next Story