6. திருப்பாவை - திருவெம்பாவை
திருப்பாவை புள்ளும் சிலம்பினகாண் புள் அரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளா எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழயக் காலோச்சி வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு
திருப்பாவை
புள்ளும் சிலம்பினகாண் புள் அரையன் கோயில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளா எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழயக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
அன்புத் தோழியே! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலியை கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட நம் இறைவன் நாராயண னின் கோவிலில் உள்ள வெள்ளைநிறச் சங்குகள் எழுப்பும் ஒலியை நீ கேட்கவில்லையா? பேய் வடிவம் எடுத்துத் தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் நஞ்சு கலந்த பாலைக் குடித்துப் பின் அவளை அழித்தவனும் சக்கர வடிவம் கொண்டு தன்னை நோக்கி வந்த சகடாசுரனை எட்டி உதைத்துக் கொன்றவனுமான கண்ணனை ஞானிகளும், முனிவர்களும் அரி! அரி! என அழைக்கும் குரல் உன்னுடைய காதில் விழவில்லையா! உடனே எழுந்திரு, இவ்வாழ்த்தொலியைக் கேட்டு மனம் குளிர்வாயாக.
திருவெம்பாவை
மானேநீ நென்னலை நாளைவந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தம்கோனைப் பாடேலோர் எம்பாவாய்
மான் போன்ற விழிகளைப் பெற்ற பெண்ணே! ‘நாளை நானே வந்து எழுப்புவேன்’ என்று நேற்று நீ சொன்ன சொல் எந்தத் திசையில் காணாமல் போனது? இன்னும் விடிய வில்லையா? விண்ணும் மண்ணும் தெரியமுடியாத சிவன் வலியவந்து கருணை பொழிகிறான். அவன் திருவடியைப் பாடிவந்த நாங்கள் மகிழ உன் திருவாயைத் திறக்க மாட்டாயா? இச்செயல் உனக்குப் பொருந்துமா? எங்களுக்கும் ஏனையோர்க்கும் தலைவனாய்த் திகழும் இறைவனை இனியாவது நீ பாடுவாயாக.

Next Story