புது முயற்சிக்கு உகந்த நாள் எது?


புது முயற்சிக்கு உகந்த நாள் எது?
x
தினத்தந்தி 21 Dec 2016 7:03 AM GMT (Updated: 21 Dec 2016 7:03 AM GMT)

பழமொழிகள் வாயிலாக கிழமைகளைப் பற்றிச் சொல்லியுள்ளார்கள். ஏழு கிழமைகளிலும் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை நாசூக்காகச் சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் பாதக நிலை ஏற்படாமல் சாதகநிலை உருவாக கிழமைக்குரிய கிரகங்களுக்கு பரி காரங்களைச் செய்தால் ஓரளவு

ழமொழிகள் வாயிலாக கிழமைகளைப் பற்றிச் சொல்லியுள்ளார்கள். ஏழு கிழமைகளிலும் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என்பதை நாசூக்காகச் சொல்லி வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். ஆனால் பாதக நிலை ஏற்படாமல் சாதகநிலை உருவாக கிழமைக்குரிய கிரகங்களுக்கு பரி காரங்களைச் செய்தால் ஓரளவு நிவர்த்தி ஏற்படும்.

ஞாயிற்றுக்கிழமை பிறந்தால் நாய்படாத பாடு
ஞாயிற்றுக்கிழமை ருதுவானால் சேமிப்பு கரையும்
திங்கள் பயணம் திரும்பா பயணம்
திங்கள் துக்கம் திரும்பவும் வரும்
செவ்வாய் வெறும் வாயோ!
செவ்வாய் ருது திருமண தாமதம்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது
சனியும், புதனும் தன்னைவிட்டுப் போகாது.
வியாழன் கூடினால் விவாகம் கூடும்!
வியாழன் விருந்து விவகாரம் உருவாக்கும்.
வெள்ளி, செவ்வாய் யோசித்துச் செலவு செய்!
வெள்ளிக்கிழமை கொள்ளிக்காகாது.
சனி வேலை, ஸ்திர வேலை


சனி பிடித்தவனுக்குச் சந்தையில் கூட கந்தை அகப்படாது.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று கூறியுள்ளது, புது முயற்சிக்கு உகந்தது புதன்கிழமை என்று பொருள்படும். இதே போல் மற்ற கிழமைகளுக்கும் மகத்தான பழமொழிகளைக் கூறிவைத்துள்ளனர்.

Next Story