ஆன்மிகம்

பார்வதிதேவி கடைப்பிடித்த விரதம் + "||" + Parvati and observed fasting

பார்வதிதேவி கடைப்பிடித்த விரதம்

பார்வதிதேவி கடைப்பிடித்த விரதம்
பிரிவை சந்தித்த தம்பதியரை, சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இந்த விரதத்தை ஒரு முறை பார்வதிதேவியே கடைப்பிடித்திருக்கிறார்.
பிரிவை சந்தித்த தம்பதியரை, சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இந்த விரதத்தை ஒரு முறை பார்வதிதேவியே கடைப்பிடித்திருக்கிறார்.

கயிலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள், பார்வதிதேவி. ஆதியும், அந்தமுமான ஈசனின் கண்கள் மூடப்பட்டதால், உலகமே இருளில் மூழ்கியது. உலக உயிர்கள் துன்பத்தில் துவண்டன. இந்தப் பாவத்தை போக்கிக் கொள்வதற்காக உமாதேவி, பூலோகம் வந்தாள். காஞ்சீபுரம் என்ற திருத்தலத்தில் உள்ள ஆற்றங்கரையில் மணலில் சிவலிங்கம் செய்து, தவம் செய்தாள். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. தண்ணீரில் சிவலிங்கம் கரைந்து போகாமல் இருக்க, காரடையான் நோன்பை அம்பாள் கடைப்பிடித்தாள். இதைக் கண்டு மணம் மகிழ்ந்த ஈசன், அம்பாளுக்கு காட்சி கொடுத்து அன்னையை தன்னுடன் இணைத்துக் கொண்டார். இங்கு தவம் செய்த அன்னையே காமாட்சி என்று பெயர் பெற்றாள். காஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த விரதத்தை, ‘காமாட்சி அம்மன் விரதம்’ என்றும் அழைக்கிறார்கள்.


வைக்கோலுக்கு மரியாதை

காரடையான் நோன்பை மேற்கொள் பவர்கள், அந்த விரத வழிபாட்டின் போது அம்பாளுக்கு நைவேத்தியமாக அடை செய்து படைப்பார்கள். இந்த அடையை, காரரசி மாவு, காராமணி அல்லது துவரை கலந்து செய்ய வேண்டும். அடை தயாரிக்கப்படும் போது வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன் ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை உடலை காத்திரு’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள் சாவித்திரி. அதன் நினைவாகத் தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.


தொடர்புடைய செய்திகள்

1. கைரேகை அற்புதங்கள் : பெண்களுக்கான திருமணத் தடை ஏன்?
திருமணம் காலா காலத்தில் நடப்பதற்கோ அல்லது தடைபடுவதற்கோ பல காரணங்கள் உள்ளன.
2. புத - ஆதித்ய யோகம் தரும் பலன்கள்...
ஜாதக கட்டத்தில் சூரியனும் புதனும் சேர்ந்து இருந்தால், அதனை ‘புத- ஆதித்ய யோகம்’ என்று கூறுவார்கள்.
3. தீபத்தில் முப்பெரும்தேவியர்
முப்புரம் எரித்த சிவனாரை வழிபடும் விதமாக, திருக்கார்த்திகையில் ஜோதியின் வடிவமாக விளக்குகளை ஏற்று கிறோம்.
4. மகாபாரதம் சொல்லும் தத்துவம்
மகாபாரதம்.. படிக்கும் ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படும், எவராலும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாத சிறப்புமிக்க காவியம்.
5. சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.