இந்த வார விசே‌ஷங்கள் 28–3–2017 முதல் 3–4–2017 வரை


இந்த வார விசே‌ஷங்கள் 28–3–2017 முதல் 3–4–2017 வரை
x
தினத்தந்தி 28 March 2017 1:15 AM GMT (Updated: 27 March 2017 12:25 PM GMT)

அருப்புக்கோட்டை, தாயமங்கலம் ஆகிய தலங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

28–ந் தேதி (செவ்வாய்)

    அருப்புக்கோட்டை, தாயமங்கலம் ஆகிய தலங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் காலை காளிங்கநர்த்தனம்,  மதியம் ஆண்டாள் திருக்கோல காட்சி.

    கும்பகோணம் ராமபிரான் உற்சவம் ஆரம்பம், இந்திர விமானத்தில் சுவாமி வீதி உலா.

    மேல்நோக்கு நாள்.

29–ந் தேதி (புதன்)

    தெலுங்கு வருடப் பிறப்பு.

    மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம், இரவு யானை வாகனத்தில் சுவாமி ராஜாங்க அலங்காரம்.

    தாயமங்கலம் முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.

    கும்பகோணம் ராமபிரான் சூரிய பிரபையில் பவனி வரும் காட்சி.

    சமநோக்கு நாள்.

30–ந் தேதி (வியாழன்)

    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோவிலில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.

    கும்பகோணம் ராமபிரான் சே‌ஷ வாகனத்தில் திருவீதி உலா.

    மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் காலை ராஜாங்க அலங்கார காட்சி.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி சூர்ணாபிஷேகம், இரவு கோ ரதம், புஷ்பப் பல்லக்கில் கல்யாண திருக்கோலமாய் காட்சியளித்தல்.

    சமநோக்கு நாள்.

31–ந் தேதி (வெள்ளி)

    லட்சுமி கணபதி விரதம்.

    குன்றக்குடி, பழனி, சுவாமிமலை, மதுரை ஆகிய தலங்களில் பங்குனி உத்திர உற்சவம் தொடக்கம்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி காலை நவநீத கிருஷ்ணன் திருக்கோலமாய் காட்சியருளல்.

    திருநெல்வேலி நெல்லை  யப்பர், சென்னை மல்லீஸ்வரர் ஆலயங்களில் உற்சவம் ஆரம்பம்.

    மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் காலை கிருஷ்ணாவதாரம், இரவு சே‌ஷ வாகனத்தில் வீதி உலா.

    கீழ்நோக்கு நாள்.

1–ந் தேதி (சனி)

    திருநெல்வேலி கரியமாணிக்கப்பெருமாள் கோவில் ரத உற்சவம்.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ரத ஊர்வலம்.

    திருப்புல்லாணி ஜெகநாத பெருமாள் கோவில் உற்சவம், சூரிய பிரபையில் பவனி.

    திருவாதவூர் சிவபெருமான் இந்திர விமானத்தில் திருவீதி உலா.

    கீழ்நோக்கு நாள்.

2–ந் தேதி (ஞாயிறு)

    முகூர்த்த நாள்.

    சஷ்டி விரதம்.

    ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.

    தாயமங்கலம் முத்துமாரியம்மன் அன்ன வாகனத்தில் வீதி உலா.

    மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் ராமாவதார காட்சியளித்தல், இரவு அனுமன் வாகனத்தில் பவனி.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்திர பிரபையிலும், ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு.

    சமநோக்கு நாள்.

3–ந் தேதி (திங்கள்)

    நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

    மன்னார்குடி ராஜகோபால சுவாமி விடையாற்று உற்சவம்.

    பழனி முருகன் கோவில் உற்சவம் தொடக்கம்.

    மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் ஆண்டாள் திருக்கோலமாய் காட்சி யளித்தல்.

    மேல்நோக்கு நாள்.


Next Story