சங்கடங்கள் நீக்கும் சனிப் பிரதோ‌ஷம்


சங்கடங்கள் நீக்கும் சனிப் பிரதோ‌ஷம்
x
தினத்தந்தி 31 March 2017 12:30 AM GMT (Updated: 30 March 2017 10:13 AM GMT)

தோ‌ஷங்களை நீக்கும் நாளே பிரதோ‌ஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டால் எல்லாவிதமான தோ‌ஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.

8–4–2017 சனிப் பிரதோ‌ஷம்

தோ‌
ஷங்களை நீக்கும் நாளே பிரதோ‌ஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த நாளில் சிவபெருமானையும், நந்தியையும் வழிபட்டால் எல்லாவிதமான தோ‌ஷங்களும் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. சிவபெருமானை தேவர்கள் வழிபடுவதற்கு என்று ஒரு காலம் உண்டு. அதே போல மனிதர்கள் சிவனை வழிபடுவதற்காக அமையப்பெற்றதே பிரதோ‌ஷ காலம் ஆகும். இதில் தேய்பிறை பிரதோ‌ஷம் மனிதர் களுக்கு உரியது. வளர்பிறை பிரதோ‌ஷம் தேவர்களின் வழிபாட்டுக்குரியது என்கிறது புராணங் கள்.

தேய்பிறை பிரதோ‌ஷங்கள் அனைத்தும் சிறப்பு மிக்கதாகும். பவுர்ணமிக்கு பிறகான தேய்பிறையில் வரும்சதுர்த்தி திதியை ‘சங்கடஹரசதுர்த்தி’ என்றுஅழைக் கிறோம்.அதே போலவே தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருப்பது நம்மவர்களின் வழக்கம். தேய்பிறையில் வரக் கூடிய திரயோதசி திதியைத்தான் ‘பிரதோ‌ஷம்’ என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சைவ சமயத்தைப் பொறுத்தவரை, பிரதோ‌ஷம் என்பது முக்கியமான விரதம் ஆகும்.

பிற நாட்களில் சிவபெருமானை மட்டும் வணங்குவதே சிறப்புக்குரியது. ஆனால் பிரதோ‌ஷ நாளில், பிரதோ‌ஷ நேரமான மாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவனோடு, நந்தியும் சேர்ந்து காட்சி தந்து அருள்பாலிப்பார். நந்தி பகவான் அந்த பிரதோ‌ஷ கால நேரத்தில் தன்னுடைய தவத்தை துறந்து விட்டு மக்களுக்காக வேண்டியதை நிறைவேற்றக்கூடியவர். அதனால்தான் பிரதோ‌ஷ நாள் அன்று, நந்தியின் காதில் சிலர் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேற ரகசியத்தைச் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

பிரதோ‌ஷ தினத்தில் எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்து விரதம் மேற்கொள்ள வேண்டும். அப்படி இருக்க முடியாதவர்கள் பிரதோ‌ஷ காலம் வரை, அதாவது மாலை 6 மணி வரை பிரதோ‌ஷ வழிபாட்டை முடித்து விட்டு உணவு உட்கொள்ளலாம். பொதுவாக பிரதோ‌ஷம் அன்று விரதம் இருப்பதால், நமது உடல் நலம் பெறுகிறது. அது ஒரு அற்புதமான வரத்தை வழங்கும் நாளாகும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. சிறப்பு மிகுந்த அந்த திரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு போன்றவை நீங்கும். உடல் நிலை, மனநிலை சீராகும். மன அழுத்தம் குறையும்.

பிரதோ‌ஷ தினத்தன்று, சிவபெருமானுக்கும், நந்தியம்பெருமானுக்கும் கறந்த பசும் பால் கொடுத்து வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுப்பது விசே‌ஷம். அது தவிர இளநீர்வழங்கியும் ஈசனை வழிபடலாம். சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். எனவே இயற்கையான வில்வ இலை, பசும்பால், இளநீர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்துவழி படுங்கள். இந்தப் பொருட்களை விட, தும்பைப் பூ மாலை சூட்டி, சிவபெருமானை வழிபடுவது சகல தோ‌ஷங் களும், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களும் விலகும் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.  

பிரதோ‌ஷம் பல வகைகளில் உள்ளன. சுக்ல பிரதோ‌ஷம், கிருஷ்ண பிரதோ‌ஷம், சனிப் பிரதோ‌ஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொரு பிரதோ‌ஷம் இருக்கிறது. ஞாயிற்றுக்  கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘ஆதிப் பிரதோ‌ஷம்’ என்றும், திங்கட்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சோமவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், செவ்வாய்க்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘மங்கள வாரப் பிரதோ‌ஷம்’ என்றும், புதன்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘புதவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வியாழக் கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘குருவாரப் பிரதோ‌ஷம்’ என்றும், வெள்ளிக்கிழமை வரும் பிரதோ‌ஷம் ‘சுக்ர வாரப் பிரதோ‌ஷம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது எல்லாவற்றையும் விட சிறப்பு வாய்ந்தது சனிக் கிழமையில் வரும் பிரதோ‌ஷம்தான். இந்த பிரதோ‌ஷத்தைத்தான் ‘மகா பிரதோ‌ஷம்’ என்று அழைக்கிறோம். சனிதான் அதிகமான தோ‌ஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று அனைவரும் நினைக்கிறார்கள். எனவே அந்தக் கிழமையில் பிரதோ‌ஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் விலகும் என்பது நம்பிக்கை.

Next Story